
உக்ரைன் நாட்டை சேர்ந்த ஸோரியா மாஷ்ப்ரோயெக்ட் நிறுவனத்தின் என்ஜின்களை தான் இந்திய கடற்படை தனது கப்பல்களில் இணைத்து பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் இந்நிறுவனத்தின் என்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க உக்ரைனிய ஸோர்யா மாஷ்ப்ரோயெக்ட் மற்றும் நமது பாரத் கனரக மின்னனு லிமிடெட் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தம் உக்ரைன் குழு இந்தியா வந்த போது கையெழுத்தாகியது, ஆகவே ஆறு ஆண்டுகளுக்கான இருதரப்பு ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதம் இரண்டு புதிய தல்வார் ரக ஃப்ரிகேட்டுகளுக்கான GTA M7N2 ரக என்ஜின்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது அதன் மதிப்பு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அதை போல உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் காரணமாக நேரடி என்ஜின் கொள்முதல் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா அவற்றை வாங்கி ரஷ்யாவில் கட்டப்பட்டு வரும் க்ரிகோரோவிச் ரக ஃப்ரிகேட்டுகளில் இணைக்க வழங்கியது குறிப்பிடத்தக்கது.