S-400 விவகாரம் இந்தியா மீது அமெரிக்கா தடை விதிக்கும் வாய்ப்பு குறைவு !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு இந்தியா ரஷ்யாவிடம் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு வாங்கினாலும் CAATSA விதியின் கீழ் தடை விதிக்கும் வாய்ப்பு குறைவு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதுவரை அமெரிக்காவின் நிலைப்பாடு உறுதியாக தெரியாத நிலையில் அமெரிக்கா இந்த ஒரு ஒப்பந்தத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க தயாராக உள்ளதாகவும்,

அதற்கு பின்னர் இந்தியா ரஷ்யாவுடன் எந்த ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அதற்கு ஒரு போதும் எத்தகைய தளர்வோ விலக்கோ அளிக்கப்படாது என அமெரிக்க தரப்பு இந்திய அரசிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் 6 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் இந்தியா வர உள்ளார் என்பதும் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதும் முக்கியத்துவம் பெறுகிறது.