முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான S4 கடல் அரக்கனை ரகசியமாக கடலில் இறக்கிய இந்தியா !!

  • Tamil Defense
  • December 30, 2021
  • Comments Off on முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான S4 கடல் அரக்கனை ரகசியமாக கடலில் இறக்கிய இந்தியா !!

இந்தியா ஏற்கனவே 6000 டன்கள் எடை கொண்ட இரண்டு அரிஹந்த் ரக அணுசக்தியால் இயங்க கூடிய அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை தயாரித்துள்ளது என்பதை நாம் அறிவோம்.

அவற்றில் அரிஹந்த் படையில் இணைந்துள்ள நிலையில், அரிகாட் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் விக்ராந்த் உடன் படையில் இணைய உள்ளது தற்போது பெயரிடப்படாத S4 ரக நீர்மூழ்கி ஒன்றின் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த S4 ரக அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் தற்போது கடலில் இறக்கப்பட்டுள்ளது இது அரிஹந்த் ரக நீர்மூழ்கிகளை விடவும் 1000 டன்கள் கூடுதல் எடை கொண்டது.

மேலும் அவற்றை விடவும் சக்தி வாய்ந்த அணு உலையை தன்னகத்தே கொண்டுள்ளது, இது தவிர 8 ஏவுகணை ஏவு குழாய்கள் இருக்கும் எனவும் அவற்றில் இருந்து K4/K5 ரக ஏவுகணைகளை ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அரிஹந்த் ரக நீர்மூழ்கி கப்பல்களில் வெறுமனே நான்கு ஏவுகுழாய் அமைப்புகள் தான் உள்ளன ஆக மொத்தத்தில் முதல் இரண்டை விடவும் இந்தியா தற்போது மிக சக்தி வாய்ந்த ஒரு கடல் அரக்கனை பெற்றுள்ளது என்றால் மிகையல்ல.