இந்தியா சீனாவுக்கு மட்டும் அல்ல தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய தொந்தரவு சீன பாதுகாப்பு வல்லுனர் !!

  • Tamil Defense
  • December 6, 2021
  • Comments Off on இந்தியா சீனாவுக்கு மட்டும் அல்ல தெற்காசிய நாடுகளுக்கு மிகப்பெரிய தொந்தரவு சீன பாதுகாப்பு வல்லுனர் !!

சீன பாதுகாப்பு வல்லுநர் செங் ஷியாங் சமீபத்தில் பேசும்போது இந்தியா சீனாவுக்கு மட்டுமின்றி தெற்காசிய நாடுகளுக்கே மிகப்பெரிய தொந்தரவு எனவும்,

சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவுடன் தொடர்ச்சியாக நட்பு பாராட்ட முயன்றாலும் இந்தியா அதனை ஏற்று கொள்வதில்லை எனவும்

இந்தியாவின் இத்தகைய அடாவடி சிந்தனை தான் அனைத்து எல்லையோர பிரச்சினைகளுக்கும் காரணம் மேலும் அடாவடி செயல்பாடுகள் மூலமாக தனது எண்ணங்களை நிறைவேற்ற முயல்கிறது எனவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது இந்திய சீன எல்லையோரம் நடைபெறும் பிரச்சினைகள் அனைத்துமே இந்தியா சீன பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதனால் தான் என்றும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.