
2022ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க ஐந்து மத்தியாசிய நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ஐந்து நாடுகளுக்கும் பிரதமர் மோடி சுற்றுபயணம் மேற்கொண்டார் என்பதும் இந்த ஐந்து நாடுகளுக்கும் சாபஹார் துறைமுகம் முலமாக கடல்சார் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் இந்தியா உறுதி அளித்ததும்
இந்தியா மத்திய ஆசிய பகுதிக்கு அளித்து வரும் முக்கியத்துவத்திற்கு சாட்சி என சர்வதேச புவிசார் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.