உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏசா ரேடார் போர் விமானங்களுக்கு வரப்பிரசாதம் !!

இந்தியா உள்நாட்டிலேயே போர் விமானங்களில் பயன்படுத்தி வரப்படும் அதிநவீன ஏசா ரக ரேடாரை சொந்தமாக தயாரித்துள்ளது.

இந்த ஏசா ரேடாருக்கு உத்தம் என பெயரிட்டு உள்ளனர். இதனை மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பு தயாரித்து சாதனை புரிந்துள்ளது.

மேலும் இந்த ரேடார் நமது சொந்த தயாரிப்பான இலகுரக தேஜாஸ் மார்க்-1 மற்றும் கடற்படையின் மிக்-29, ஐந்தாம் தலைமுறை ஆம்கா ரக போர் விமானங்களில் இணைத்து பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் படையில் இணைய உள்ள 83 தேஜாஸ் விமானங்களும் இவற்றை பெற உள்ளன இந்த ரேடார் மூலம் 100 கிமீ அல்லது அதற்கும் அதிகமான தொலைவில் உள்ள 50 இலக்குகளை அடையாளம் 4ஐ ஒரே நேரத்தில் குறிவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.