இந்திய அரசு வானிலிருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணை திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது, அதன்படி சப்சானிக் சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை உருவாக்க உள்ளது.
இந்த ஏவுகணைகளை இந்திய தயாரிப்பு மற்றும் விமானப்படையில் ஏற்கனவே உள்ள பல்வேறு வெளிநாட்டு தயாரிப்பு போர் விமானங்களில் இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும் வகையில் உருவாக்க திட்டமிட்டு உள்ளனர்.
HAL CATS – HUNTER
இது HAL நிறுவனம் தயாரிக்கும் CATS அமைப்பில் உள்ள HUNTER எனப்படும் வானிலிருந்து ஏவப்படும் க்ரூஸ் ஏவுகணையாகும்.
BRAHMOS-NG: வழக்கமான பிரம்மாஸ் ஏவுகணையை விடவும் சிறிய ஆனால் அதே திறன்களை கொண்ட அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகள் 2024ஆம் ஆண்டில் சோதனையில் உட்படுத்தப்பட உள்ளன. இவற்றை தேஜாஸ் உட்பட அனைத்து விமானங்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
LRLACM : Long Range Land Attack Cruise Missile அதாவது இது தொலைதூர தரை தாக்குதல் க்ரூஸ் ஏவுகணையாகும் இது இந்தியா தயாரித்த எந்த க்ருஸ் ஏவுகணையை விடவும் அதிக தொலைவு செல்லக்கூடியது மேலும் சப்சானிக் மற்றும் சூப்பர்சானிக் திறன்களை கொண்டது.
ALHCM: Air Launched Hypersonic Cruise Missile எனப்படும் இது வானிலிருந்து ஏவப்படும் ஹைப்பர்சானிக் க்ருஸ் ஏவுகணையாகும் 2026 – 2027 ஆண்டு வாக்கில் இது படையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.