
நாட்டின் எல்லைகளில் ட்ரோன்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைத் தடுக்க, இந்தியா உள்நாட்டிலேயே ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாகவும், இது விரைவில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) 57வது தொடக்க நாள் விழாவில் பேசிய ஷா, மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரை, எல்லைப் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு என்றும், உலகின் மிகச் சிறந்த எல்லைக் காவல் தொழில்நுட்பங்களை பிஎஸ்எப் படைக்கு வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.
1965 ஆம் ஆண்டு பிஎஸ்எப் தொடங்கப்பட்ட பின்னர், அதன் எழுச்சி நாள் விழா எல்லையில் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும்போது உலகில் முன்னேற முடியும். நீங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறீர்கள்…
எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நீங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறீர்கள், ”என்று அமித்ஷா பிஎஸ்எஃப் வீரர்களிடம் கூறினார்.
உலகின் சிறந்த தொழில்நுட்பங்கள் பிஎஸ்எப் க்கு கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றார்.
பிஎஸ்எப் -ல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, அரசாங்கம் 50,000 ஜவான்களை நியமித்துள்ளது மற்றும் அவர்களின் பயிற்சி தொடங்கியுள்ளது, என்றார்.
2008-14ல் எல்லைப் பகுதிகளுக்கான சாலை கட்டுமான பட்ஜெட் ரூ.23,000 கோடியாக இருந்தது.2014 மற்றும் 2020 க்கு இடையில், மோடி அரசாங்கம் பட்ஜெட்டை ரூ.23,700 கோடியிலிருந்து ரூ.44,600 கோடியாக உயர்த்தியது.
இது எல்லைப் பகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மோடி அரசின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது,” என்றார்.