இனி ஒரு ஆண்டில் 90 பிரம்மாஸ் ஏவுகணைகள் தயாரிப்பு !!

  • Tamil Defense
  • December 27, 2021
  • Comments Off on இனி ஒரு ஆண்டில் 90 பிரம்மாஸ் ஏவுகணைகள் தயாரிப்பு !!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஒரு புதிய தயாரிப்பு மையத்தை அமைக்க உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் இந்தியா அமைதியை விரும்பும் நாடு ஆனால் அதே நேரத்தில் சீண்டப்பட்டால் தகுந்த பதிலடியை கொடுக்கும் ஆற்றல் கொண்டது எனவும்

பிரம்மாஸ் ஏவுகணைகளை இந்திய மண்ணிலேயே தயாரிக்க விரும்புவதாகவும் அதன் அணு ஆயுத தாக்குதல் திறனை குறிப்பிட்டு இந்தியா மீது எந்த நாடும் தனது தீய எண்ணங்களை திணிக்க முடியாதபடி தடுக்கும் எனவும் கூறினார்.

இந்த புதிய தயாரிப்பு மையம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஒர் ஆண்டுக்கு 80 முதல் 90 அடுத்த தலைமுறை பிரம்மாஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.