இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கையெழுத்தான 4 ராணுவ ஒப்பந்தங்கள் !!

  • Tamil Defense
  • December 7, 2021
  • Comments Off on இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கையெழுத்தான 4 ராணுவ ஒப்பந்தங்கள் !!

இந்தியா மற்றும் ரஷ்யா நேற்று உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் 6 லட்சம் ஏகே-203 ரக துப்பாக்கிகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டன.

இந்த நிகழ்ச்சி “ராணுவத்திற்கான இந்தியா ரஷ்யா இருதரப்பு அரசு ஆணையம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு” அமைப்பின் 20ஆவது சந்திப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதை போல 2019ஆம் ஆண்டு கையெழுத்தான கலாஷ்னிகோவ் ரக துப்பாக்கிகளின் தயாரிப்பு புரிந்துணர்வு ஷரத்தில் சில மாற்றங்கள் செய்யவும் ஒப்பு கொள்ளப்பட்டது.

இது போக இந்தியா ரஷ்யா இடையே பல ஆண்டு காலமாக உள்ள ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் மீண்டும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக இரண்டு நாடுகளும் செய்து கொண்ட நான்கிவது ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.