மத்திய ஆசிய நாடுகளில் உள்ள சோவியத் காலகட்ட தொழிற்சாலைகளை பயன்படுத்தி இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவை கூட்டாக ராணுவ தயாரிப்பை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளன.
மத்திய ஆசியாவில் உள்ள கஸகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளில் இந்த திட்டங்களை செயல்படுத்த இரண்டு நாடுகளும் விரும்புகின்றன.
இதன் மூலம் இந்த ஐந்து நாடுகளின் பாதுகாப்பு தேவைகள் எளிதில் சந்திக்கப்படும். மேலும் இந்தியா உலகளவில் வலுவான பாதுகாப்பு ஏற்றமதியாளராக உதவும் இது தவிர மத்திய ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை அடக்க முடியும்.
அதை போலவே மத்திய ஆசியாவில் ஆஃப்கானிஸ்தான் உடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகபடுத்தி மூன்று தரப்பும் இணைந்து ஆஃப்கனை கண்காணிக்க முடியும்.
ரஷ்யா மிக நீண்ட காலமாகவே மத்திய ஆசியாவில் இந்தியாவை இணைந்து செயல்படுமாறு அழைத்த நிலையில் இந்தியா தயக்கம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.