
இரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையின் போது 21 Mig-29UPG போர்விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒப்பந்தம் ஏற்படுமாயின் விமானப்படைக்கு இரஷ்யா பயன்படுத்தாக 21 mig 29 airframes கிடைக்கும்.இவற்றை UPG தரத்திற்கு இந்திய விமானப்படை அப்கிரேடு செய்து தனது படையில் இணைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர உத்தம் AESA Radar ரேடார் மற்றும் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள D-29 EW suite ஆகியவையும் பெறப்பட உள்ளன.
இந்திய- இரஷ்ய பாதுகாப்பு தொடர்பான உறவை வலுப்படுத்தும் பொருட்டு புதின் இந்தியா வருகிறார். அவரது வருகையின் போது 7.5 லட்சம் ஏகே-203 துப்பாக்கிகள் வழங்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.