2030வாக்கில் விண்வெளி நிலையம் அமைக்கும் இந்தியா பாராளுமன்றத்தில் தகவல் !!

  • Tamil Defense
  • December 13, 2021
  • Comments Off on 2030வாக்கில் விண்வெளி நிலையம் அமைக்கும் இந்தியா பாராளுமன்றத்தில் தகவல் !!

இந்தியா 2030ஆம் ஆண்டு வாக்கில் உள்நாட்டிலேயே முழுக்க முழுக்க தயாரான விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க உள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட சில ஆண்டுகளில் இந்த திட்டமும் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரால் நாடாளுமன்ற கூட்ட தொடரில் மத்திய அமைச்சர் தகவல் அளித்தார்.

2019ஆம் ஆண்டு முதல் முறையாக இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் இதை பற்றிய தகவல்களை வெளி உலகிற்கு அறிவித்தார்.

அதன்படி சுமார் 20 டன்கள் இருக்கும் எனவும் விண்வெளியில் பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும் எனவும் விண்வெளி வீரர்கள் 15-20 நாட்கள் தங்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரோ தலைவர் சிவனுடைய கூற்றுப்படி ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட 6 அல்லது 7 ஆண்டுகளில் இந்த திட்டமும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.