உள்நாட்டு தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க கைகோர்க்கும் விமானப்படை மற்றும் தில்லி ஐஐடி !!

இந்திய விமானப்படை மற்றும் ஐஐடி தில்லி ஆகியவை இந்திய விமானப்படையில் உள்நாட்டு தொழில்நுட்பங்களை புகுத்த ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய தொழில்நுட்பங்களுக்கு மிகப்பெரிய அளவில் உத்வேகம் மற்றும் ஊக்குவிப்பு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படையின் பராமரிப்பு கட்டளையகத்தின் மூத்த பராமரிப்பு அதிகாரியான ஏர் வைஸ் மார்ஷல் சமீர் போராடே மற்றும் தில்லி ஜஜடியின் மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறை தலைவர் எம் ஆர் ரவி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஐஐடி தில்லி இந்திய விமானப்படைக்கு ஆராய்ச்சியுடன் கூடிய ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தள பராமரிப்பை மேம்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது.