விரைவில் இந்திய கடற்படையில் இணைய உள்ள உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல் !!

  • Tamil Defense
  • December 2, 2021
  • Comments Off on விரைவில் இந்திய கடற்படையில் இணைய உள்ள உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல் !!

இந்திய கடலோர காவல்படையின் செய்தி தொடர்பாளர் ஊடகங்களிடம் சமீபத்தில் பேசிய போது, அடுத்த ஆண்டு 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து கப்பல் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

இந்த 10 ஹெலிகாப்டர்களும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்களின் மார்க்-3 ரகம் ஆகும்.

ஏற்கனவே மொத்தமாக இத்தகைய 16 ஹெலிகாப்டர்களை படையில் இணைக்க ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் 6 இணைக்கப்பட்டன மீதமுள்ளவை தான் இந்த 10 ஹெலிகாப்டர்கள் ஆகும்.

இது தவிர ஒரு புதிய ரோந்து கப்பல் ஒன்றும் படையில் இணைக்கப்படும் எனவும் 20 கலன்கள் கட்டுமானத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.