1971ஆம் வருடம் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் நிகழ்ந்த ஒர் சாகக நிகழ்வு. அன்று இந்திய விமானப்படைக்கு துணைக்கண்டத்தில் சவால் கொடுக்ககூடிய அளவுக்கு எதிரிகள் இல்லை. பாகிஸ்தான் விமானப்படையும் நொறுக்கப்பட்டு இருந்தது. இந்தியா ஒர் மாபெரும் வெற்றியை (டாக்கா) நெருங்கி கொண்டிருந்த நேரம்.
அந்த சமயத்தில் தான் அமெரிக்கா தனது “யு.எஸ்.எஸ் என்டர்ப்ரைஸ்” எனும் 95,000டன்கள் எடை கொண்ட ராட்சத விமானந்தாங்கி போர்க்கப்பலை இந்தியாவுக்கு எதிராக வங்காள விரிகுடா பகுதிக்கு அனுப்பியது, இதன் பணி இந்தியாவை தாக்கி பாகிஸ்தானை காபாற்றுவது.
அந்த இந்திய அரசு சோவியத் ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தாலும் இந்திய விமானப்படை சும்மா கையை கட்டி வேடிக்கை பார்க்க விரும்பவில்லை. உடனடியாக ஒர் சாகச திட்டம் வகுக்கப்பட்டது அதாவது அந்த ராட்சத அமெரிக்க கப்பல் மீீது காமிகாஸே (Kamikaze attack) வகை தாக்குதல் நடத்துவது தான் அது.

காமிகாஸே தாக்குதல் என்பது தற்கொலை படை தாக்குதல் முறையாகும். இரண்டாம் உலக போரில் ஐப்பான் விமானிகள் இந்த உத்தியை பயன்படுத்தி தான் பியர்ல் ஹார்பரை தாக்கி அமெரிக்க கடற்படையின் பெரும்பிரிவை அழித்தனர்.
அதன்படி இத்திட்டம் இந்திய விமானப்படை விமானிகளிடம் தெரிவிக்கபட்டது உடனடியாக 40விமானிகள் தங்களது குடும்பங்கள் கைவிடப்படாது என்ற உறுதியின் அடிப்படையில் தாமாக இந்த நடவடிக்கையில் பங்கேற்க முன்வந்தனர்.
ஆக தாக்குதல் திட்டத்தின்படி அமெரிக்க கடற்படை அணியை நெருங்கி குண்டுவீச வேண்டும் மேலும் சந்தர்ப்பம் கிடைத்தால் விமானத்துடன் மோதி உயிரை கொடுத்தாவது அந்த ராட்சத கப்பலை மூழ்கடிக்க தயாராக இருந்தனர்.
ஒன்றல்ல, இரண்டல்ல 40பேர் தங்களது மரண சாசனத்தை தாங்களே எழுதிக்கொண்டனர், இந்த தேசத்தின் மீதும் அதன் குடிகள் மீதும் கொண்ட பாசத்திற்காக இந்த தேசத்தின் இறையாண்மையை காக்க உலகின் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசான அமெரிக்காவை எதிர்க்க 40பேரும் தயாராகினர்.

அவர்களின் குடும்பங்கள் இந்திய விமானப்படை மற்றும் அரசால் கவனிக்கப்படும் என்ற உறுதியும் அந்த விமானிகளுக்கு அளிக்கப்பட்டது.
40பேரும் தங்களது கேன்பரா (Canberra)
விமானத்தில் ஆயதங்களுடன் தற்கொலை தாக்குதல் நடத்தி அந்த ராட்சத கப்பலை மூழ்கடிக்க தயாரான போது கடைசி நேரத்தில் சோவியத் ஒன்றியம் மிகப்பெரிய கடற்படை பிரிவை அனுப்பியதால் அமெரிக்கா பின்வாங்கியது.
அதனால் இத்திட்டத்திற்கான தேவையும் இல்லாமல் போனது, ஆனால் இந்த ஆபரேஷன் நிகழ்ந்திருந்தால் இந்திய வரலாற்றில் மாபெரும் வீரகாவியமாக வந்திருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை எனினும் 40உயிர்கள் காக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியே…
இந்த 40பேர் கொண்ட படையணியின் தலைவராக ஏர் கம்மொடர் க்ரிஷன் குமார் பத்வார் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய விமானப்படை (Log book) பதிவேட்டில் இருந்து கிடைக்கபெற்ற தகவலால் தான் இத்திட்டம் வெளி உலகிற்கு வெளிச்சமானது.

இவர் இந்திய விமானப்படையின் 35வது ஸ்க்வாட்ரனை சார்ந்தவர் , அதே 1971போரில் பல்வேறு பாக் படைத்தளங்கள் மற்றும் கராச்சி நகரத்தில் எண்ணெய் கிடங்குகளை விமானம் மூலம் குண்டு வீசி துவம்சம் செய்தவர் அதற்காக வீர் சக்ரா விருதினை பெற்றவர்.
இது சார்ந்த குறிப்புகளை அவருடைய பதிவேட்டு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காணலாம். அது இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த மாவீரர்கள் எல்லாம் மறக்கப்பட்டவர்கள் ஆவர்
ஏறத்தாழ 50 வருடங்களுக்கு பின்பு தான் இந்த சம்பவம் பற்றி தெரிய வருகிறது. அந்த 40மாவீரர்களும் இத்தனை நாளும் சாதாரண மனிதனாக நம்மிடையே வாழந்துள்ளனர் ஒருவரை தவிர மீதமுள்ள 39 விமானிகள் யார் யார் என நமக்கு தெரியாது என்பது வருந்தத்தக்கதே.