ஹெலிகாப்டர் விபத்து விசாரணைக்கு உத்தரவிட்ட இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • December 9, 2021
  • Comments Off on ஹெலிகாப்டர் விபத்து விசாரணைக்கு உத்தரவிட்ட இந்திய விமானப்படை !!

நேற்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்கடன் பகுதியில் அமைந்துள்ள DSSC கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இந்திய கூட்டு படை தலைமை தளபதி அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் வந்தனர்.

அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் பகுதியில் துரதிர்ஷ்டவசமாக தரையில் விழந்து வெடித்து விபத்துக்குள்ளானது மேலும் எரிபொருள் கசிவால் தீப்பிடித்து எரிந்து கருகியது.

இதில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் (தலைவி ராணுவ மனைவிகள் நலச்சங்கம்) இரண்டு தரைப்படை அதிகாரிகள் விமானிகள் பாதுகாப்பு வீரர்கள் விமானப்படை வீரர்கள் என 13 பேர் மரணமடைந்தனர்.

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விபத்து பற்றி விசாரணை நடத்த இந்திய விமானப்படை விசாரணை நடத்தி காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளது.