
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊட்டி குன்னூரில் மி17 வி5 ரக விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இவர்களில் ஜெனரல் பிபின் ராவத்தின் பாதுகாவலர்களாக பணியாற்றி வந்த லான்ஸ் நாயக் சாய் தேஜா மற்றும் லான்ஸ் நாயக் விவேக் குமார் ஆகியோரின் உடல் அடையளமே தெரியாத வகையில் கருகிய நிலையில் இருந்தன.
இந்த நிலையில் டி.என்.ஏ ஆய்வு முலமாக இருவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்ட நிலையில் தில்லி ராணுவ மருத்துவமனையில் மரியாதை செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் சிலரின் உடல்கள் அடையாளம் காண்பதற்காக டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.