உக்ரைனுடைய ராணுவத்தில் பாதி ரஷ்ய எல்லையோரம் குவிப்பு !!

  • Tamil Defense
  • December 3, 2021
  • Comments Off on உக்ரைனுடைய ராணுவத்தில் பாதி ரஷ்ய எல்லையோரம் குவிப்பு !!

உக்ரைன் தற்போது ஏறத்தாழ ஒரு லட்சம் வீரர்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் தளவாடங்களை ரஷ்ய எல்லையுடன் உள்ள டான்பாஸ் பகுதியில் நிறுத்தி உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் மரியா ஸகரோவா பேசுகையில் உக்ரைனுடைய ராணுவம் வீரர்கள் மற்றும் தளவாடங்களை அதிகளவில் குவித்து வருவதாக தெரிவித்தார்.

ஏற்கனவே 1,25,000 வீரர்கள் பிரச்சினை நிறைந்த டான்பாஸ் பகுதியில் உள்ளதாகவும் இது உக்ரைனுடைய ராணுவத்தில் பகுதி அளவு எனவும் அவர் கூறினார்.

அதை போல உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அந்நாட்டு பாராளுமன்றத்தில் வெளிநாட்டு படைகளை உக்ரைனில் அனுமதிக்கும் சட்ட வரைவை தாக்கல் செய்ததையும் கண்டித்து பேசினார்.