
பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே ஒரு ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறது.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் திரு. மாதவன் கூறும்போது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே ஒரு ராணுவ போக்குவரத்து விமானத்தை தயாரிக்க முடியும் எனவும் அதனை சிவிலியன் போக்குவரத்திற்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே தேசிய ஏரோஸ்பேஸ் ஆய்வகம் நடத்தி வரும் 90 பயணிகளுக்கான போக்குவரத்து விமான திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை காலதாமதம் அதிகமாகும் போது சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்றார்.
ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா போக்குவரத்து விமானம் தயாரிக்க இருந்த திட்டம் ரத்தானது அதில் இந்தியா சார்பில் HAL நிறுவனம் பங்கு பெறுவதாக இருந்தது
இதுதவிர சமீபத்தில் இந்திய விமானப்படைக்காக 56 சி295 ராணுவ போக்குவரத்து விமானங்களை இந்லியாவில் தயாரிக்கும் திட்டத்தில் டாடா குழுமத்திடம் HAL தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.