மிக்29கே போர் விமானத்திற்கான மேம்பாட்டு பணிகளை ஆரம்பித்த HAL !!

  • Tamil Defense
  • December 21, 2021
  • Comments Off on மிக்29கே போர் விமானத்திற்கான மேம்பாட்டு பணிகளை ஆரம்பித்த HAL !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது மிக்29 கு ரக போர் விமானங்களுக்கான மேம்பாட்டு பணிகளை ஆரம்பித்து உள்ளது.

இதற்காக அந்நிறுவனத்தின் ஒரு பிரிவான விமான மேம்பாட்டு ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையம் (AURDC) இதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

இந்திய கடற்படையின் மிக்29 கே ரக போர் விமானங்களில் லேசர் அமைப்புகள் மற்றும் லேசர் வழிகாட்டபட்ட குண்டுகளை இணைத்து பயன்படுத்தி கொள்ள வசதிகள் செய்யப்பட உள்ளன.

இதுதவிர உள்நாட்டு கணிணி அமைப்புகள், உள்நாட்டு வான் மற்றும் தரை இலக்கு ஆயுதங்கள்,அஸ்திரா மற்றும் பொது பயன்பாட்டு குண்டுகள் ஆகியவற்றை இந்த போர் விமானங்களில் இணைக்க உள்ளனர்.

இதன் காரணமாக இந்த ரக போர் விமானங்களில் பகல் இரவு தாக்குதல் திறன்கள், துல்லியத்தன்மை நீண்ட தாக்குதல் வரம்பு ஆகியவை போன்ற திறன்கள் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மிக்29 கே ரக போர் விமானங்களில் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் பிற நாட்டு ஆயுதங்களை இணைக்க மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்தால் தான் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.