
DRDOவின் ஒரு பிரிவான விமான மேம்பாட்டு அமைப்பு பெங்களூர் நகரில் நடத்திய நிகழ்ச்சியில் ஒரு CAD படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பார்ப்பதற்கு இஸ்ரேலிய ஹெரோன் ஆளில்லா விமானத்தை போன்றே இருந்த அது தான் இந்தியா சொந்தமாக தயாரிக்க உள்ள HALE ரக ட்ரோன் என்பது பின்னர் தெரிய வந்தது.
HALE – High Altitude Long Endurance அதாவது அதிக உயரம் மற்றும் நீண்ட நேரம் பறக்க கூடிய ட்ரோன் என்பது இதன் பொருளாகும், இவை உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ட்ரோன்கள் ஆகும்.
இந்த புதிய ட்ரோனில் என்ஜின் பின்புறம் இருக்கும் 4 டன் அளவில் ரஸ்டம்-1 ட்ரோனை விடவும் பெரியதாக இருக்கும் 40ஆயிரம் முதல் 45ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதே போல ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் 50,000 அடி உயரம் செல்லக்கூடிய டர்போ ஃபேன் என்ஜின் கொண்ட HALE ரக ட்ரோனை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.