4ஆவது மற்றும் 5ஆவது நீர்மூழ்கி எதிர்ப்பு கலன்களுக்கான கட்டுமான பணிகள் ஆரம்பம் !!

  • Tamil Defense
  • December 3, 2021
  • Comments Off on 4ஆவது மற்றும் 5ஆவது நீர்மூழ்கி எதிர்ப்பு கலன்களுக்கான கட்டுமான பணிகள் ஆரம்பம் !!

இந்திய கடற்படைக்கு ஆழம் குறைந்த பகுதிகளில் பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை எதிர்க்க சிறிய கலன்கள் கட்டபட்டு வருகின்றன.

இத்தகைய கலன்களை ASWSWC – Anti Submarine Warfare Shallow Water Craft என அழைக்கின்றனர், இவை அதிக வேகத்தில் இயங்க கூடியவை ஆகும்.

அதிகபட்சமாக சுமார் 25 நாட்ஸ் வேகத்தில் செல்லக்கூடிய இவை 57 வீரர்களுடன் இயங்கும் மேலும் கடல் பரப்பு மற்றும் கடலுக்கு அடியே கண்காணிக்கும் திறன்களை கொண்டிருக்கும்.

இவற்றை தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இரவு மற்றும் பகலிலும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இத்தகைய கலன்களில் முறையே 4ஆவது மற்றும் 5ஆவது கலன்களுக்கான கட்டுமான பணிகள் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் நேற்று துவங்கியது.