தற்போது இந்திய தரைப்படையின் தலைமை தளபதியாக ஜெனரல் நரவாணே உள்ளார் இவர் தற்காலிகமாக ஜெனரல் பிபின் ராவத்தின் இடத்தை நிரப்ப உள்ளார்.
புதிய கூட்டுபடைகள் தலைமை தளபதியாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ஜெனரல் நரவாணே தளபதிகள் கமிட்டியின் சேர்மனாக செயல்படுவார்.
தளபதிகள் கமிட்டியின் சேர்மன் தான் CDS பதவிக்கு முன்னர் இருந்த ஒரு ஏற்பாடாகும் முப்படை தளபதிகளில் மூத்தவர் இப்பதவியையும் தனது படையின் தலைமையையும் வகிப்பார்.
ஆனால் கூட்டுபடைகளை தலைமை தளபதி என்பது தனி பதவியாகும் ராணுவ விவகாரங்கள் துறையின் தலைவராகவும் இருப்பார் முப்படைகளின் நிர்வாக அதிகாரங்கள் அவரிடம் இருக்கும்.
மேலும் அரசுக்கு முப்படை தளபதிகள் தங்கள் படைசாரந்த ஆலோசனை வழங்கும்போது கூட்டுபடை தலைமை தளபதி அரசுக்கு ஒற்றைப்புள்ளி பாதுகாப்பு ஆலோசகராக இருப்பார் ஆனால் படைகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.