
சமீபத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிர் இழந்தனர்.
தற்போது கூட்டுபடைகள் தலைமை தளபதியின் பதவி காலியாக உள்ள நிலையில் மத்திய அரசு இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது.
தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து வெளியான தகவல்களின் படி தரைப்படை தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் நரவாணேயின் பெயர் இதில் முன்னனியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம் விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் முறையே செப்டம்பர் 30 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் அதாவது சமீபத்தில் தான் தளபதி பொறுப்பை ஏற்று கொண்டனர் ஆகவே அவர்கள் கூட்டுபடை தலைமை தளபதி பொறுப்பிற்கு நியமிக்க முடியாது.
இதற்கான ஆலோசனைகளை பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு துறைக்கான கேபினட் கமிட்டி ஈடுபட்டு வருகிறது எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுமே இதுவரை அரசு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.
ஜெனரல் ராவத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவு அவர் தொடங்கி வைத்து முப்படைகள் ஒருங்கிணைப்பு நவீனப்படுத்துதல் போன்ற பணிகளை முடக்கி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.