மேலதிக ரஃபேல் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் வழங்க ஃபிரான்ஸ் தயார் !!

  • Tamil Defense
  • December 19, 2021
  • Comments Off on மேலதிக ரஃபேல் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் வழங்க ஃபிரான்ஸ் தயார் !!

ஃபிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளாரன்ஸ் பார்லி நேற்று இந்தியாவிற்கு மேலதிக ரஃபேல் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டதின் கீழ் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது விரைவில் படையில் இணைய உள்ள இரண்டாவது விமானந்தாங்கி கப்பலுக்கான தேவைகளையும் சேர்த்து
இந்தியாவின் போர் விமான தேவைகளை நிறைவேற்ற ஃபிரான்ஸ் உதவும் எனவும் கூறினார்.

குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஃபிரான்ஸ் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் சமீப காலமாக படையில் இணைந்து வரும் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகள் இதற்கு உதாரணம எனவும் கூறினார்.

பாரகுடா ரக அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவிற்கு வழங்க ஃபிரான்ஸ் தயாராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.