காஷ்மீரில் நான்கு ஜெய்ஷ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கைது !!
1 min read

காஷ்மீரில் நான்கு ஜெய்ஷ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் கைது !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் நான்கு ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தரைப்படை, மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய ஆபரேஷனில் நான்கு பேரும் கைதாகி உள்ளனர்.

அவர்களிடம் இருந்து கை துப்பாக்கி, கையெறி குண்டுகள் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடி குண்டுகள் கைபற்றப்பட்டுள்ளன பின்னர் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது இந்த நான்கு பேரும் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பின் உறுப்பினர்கள் என்பதும் சம்பூரா மற்றும் பாம்போர் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது ஆயுதம் சப்ளை செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.