
ஜம்மு காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் பாதுகாப்பு படைகள் ஐந்து பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளன.மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற என்கௌன்டர்களில் இந்த ஐந்து பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் ட்ரால், சோபியான் மற்றும் பிஜ்பெஹரா ஆகிய பகுதிகளில் இந்த என்கௌன்டர்கள் நடைபெற்றுள்ளன.அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ் மற்றும லஷ்கர் ஆகிய இயக்கங்களை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த என்கௌன்டரில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் காவல் துறை வீரரின் உயிரிழப்பு காரணமான ஒரு பயங்கரவாதி மற்றும் கன்னிவெடிகளை தயாரிப்பதில் தேர்ந்த ஒரு பயங்கரவாதி இந்த என்கௌன்டர்களில் வீழ்த்தப்பட்டுள்ளனர்.