
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராதிரி கோத்தகுடேம் காவல்நிலையத்தில் ஐந்து நக்சல் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை சரணடைந்து உள்ளனர்.
அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதுபற்றி கூறுகையில் மூன்று கிராம குழு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு நக்சல்கள் சரணடைந்து உள்ளதாக கூறினார்.
ஐந்து நக்சல் பயங்கரவாதிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல்படையின் 141 பட்டாலியன் அதிகாரிகள் முன்பு சரணடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் பெயர்களாவன, தூதி கங்கா, பொடியம் அடமையா, குஸ்கு கோசையா, பொடியம் ராஜே மற்றும் சோதி காங்கி ஆகியோர் ஆவர்.