இந்திய கடற்படையின் முதலாவது சர்வே கப்பல் கடலில் இறக்கப்பட்டது !!
கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படைக்கான முதலாவது சர்வே கப்பல் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் முன்னிலையில் கடலில் இறக்கப்பட்டது.
இந்த முதலாவது கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். சந்தாயக் ஆகும், இந்த கப்பலை வடிவமைத்து கட்டியது கார்டன் ரீச் கப்பல் கட்டுமான தளமாகும், பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட்டின் மனைவி திருமதி. புஷ்பா பாட் கப்பலை இறக்கினார்.
மொத்தமாக இத்தகைய நான்கு கப்பல்கள் கட்டப்பட உள்ளன இவை கடலோர.பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகள், துறைமுக பாதைகள் ஆகியவற்றை ஆய்வு செய்து கடல்வழி பயணத்திற்கான பாதைகளை கண்டறியும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட பணி இவற்றின் பிரதான பணியாகும் இது தவிர இந்த கப்பல்கள் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு, மருத்துவ உதவிகள் போன்றவற்றை அவசர காலத்தில் வழங்கும் இவற்றில் ஒரு ஹெலிகாப்டர் இருக்கும்.
2435 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நான்கு சர்வே கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று அனுமதி வழங்கப்பட்டது.
மீதமுள்ள மூன்று கப்பல்களும் சென்னை அருகே உள்ள காட்டுபள்ளி கப்பல் கட்டுமான தளத்தில் கட்டப்பட உள்ளன மேலும் இந்த வகை கலன்களில் சுமார் 80% இந்திய தொழில்நுட்பம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.