
ஈரான் தனது கிழக்கு பகுதியில் ஆஃப்கானிஸ்தான் உடன் 900 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஈரானிய எல்லையோர மாகாணமான நிம்ரோஸில் தாலிபான்கள் மற்றும் ஈரான் படைகள் இடையே மோதல் நடைபெற்றுள்ளது.
ஈரானிய விவசாயிகள் ஆஃப்கானிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியதாகவும் இதனால் தாலிபான்கள் சுட்டதாகவும் அதற்கு ஈரான் படைகள் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலுக்கு பிறகு உடனடியாக இருநாட்டு எல்லை பாதுகாப்பு படையினரும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஈரான் தாலிபான்களின் அரசை அங்கீகரிக்கவில்லை என்பதும் தினமும் ஆஃப்கானில் இருந்து பல்லாயிரம் அகதிகள் ஈரான் நோக்கி செல்வதும் குறிப்பிடத்தக்கது.