மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை வலுப்பெறும் ஆர்ட்டில்லரி படை !!

  • Tamil Defense
  • December 11, 2021
  • Comments Off on மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை வலுப்பெறும் ஆர்ட்டில்லரி படை !!

இன்று பொக்ரானில் நடைபெற்ற சோதனையில் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக தங்களது இலக்குகளை தாக்கி அழித்தன.

இவற்றால் படையெடுத்து வரும் டாங்கி படையணிகளை வெற்றிகரமாக தாக்கி அழிக்க முடியும் இதில் உள்ள காந்த உணரி சென்சார் டாங்கிகள் அருகில் வரும்போது உணர்ந்து வெடிகுண்டை வெடிக்க செய்யும்.

இந்த வகை குண்டுகள் தரையை நெருங்கும்போது பாராசூட் மூலமாக தரை இறங்கி தரையில் பதிந்து இலக்குகள் அருகில் வரும் வரை காத்து இருக்கும் மேலும் சென்சார் உடனடியாக செயல்படும் ஒருவேளை சென்சார் வேலை செய்யாவிட்டால் தானாகவே வெடிக்கும்.

மேலும் ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெடுகளில் இருந்தும் பல்வேறு சின்னஞ்சிறு குண்டுகள் ஒவ்வொன்றிலும் வெடிக்க வைக்கும் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் அவை வெடிப்பிற்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.