1 min read
ஐக்கிய அரபு அமீரகம் சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் !!
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அங்கு நடைபெறும் இந்திய பெருங்கடல் பொருளாதாரம், பெருந்தொற்று, சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்து கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.
அங்கு அந்நாட்டின் இளவரசர் மொஹம்மது பின் சாயத் அல் நயான் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லாஹ் பின் சாயத் ஆகியோரை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசினார்.
பின்னர் ஒமன் வெளியுறவு அமைச்சர் சையத் பாதர் அப்துல்சைதி மற்றும் இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சா ஆகியோரை சந்தித்து பேசினார்.
மேற்குறிப்பிட்ட மாநாட்டில் 30 நாடுகளில் இருந்து 300 பிரதிநிதிகள் மற்றும் 50 பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.