மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட குவாசி பலிஸ்டிக் ஏவுகணை பிரலே

  • Tamil Defense
  • December 24, 2021
  • Comments Off on மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட குவாசி பலிஸ்டிக் ஏவுகணை பிரலே

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) டிசம்பர் 23, 2021 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘பிரலே’ என்ற ஏவுகணையின் இரண்டாவது சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

முதன்முறையாக, தொடர்ந்து இரண்டு நாட்களில் இரண்டு முறை ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனை அனைத்து பணி நோக்கங்களையும் பூர்த்தி செய்தது.

இந்த ஏவுதல் அனைத்து ரேஞ்ச் சென்சார்கள் மற்றும் கருவிகளால் கண்காணிக்கப்பட்டது.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ மற்றும் தொடர்புடைய குழுக்களுக்கு இந்த தொடர்ச்சியான வெற்றிகரமான மேம்பாட்டு ஏவுகணை சோதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.