
ஜனவரி 25 – ஆகாஷ்- NG

இந்த வருடம் முதல் மாதமான ஜனவரி 25ல் டிஆர்டிஓ ஆகாஷ் அடுத்த தலைமுறை ஏவுகணையை சோதனை செய்தது. குறைந்த Radar cross section கொண்ட வளைந்து நெளிந்து செல்லக்கூடிய இலக்கை அழிக்க இந்த ஏவுகணை விமானப்படைக்கு உதவும்.
துருவாஸ்திரா/ ஹெலினா

இந்த வருடம் பிப்ரவரி மாதம் இராணுவத்திற்கான ஹெலினா டேங்க் எதிர்ப்பு ஏவுகணையும், விமானப்படைக்கான துருவாஸ்திரா ஏவுகணையும் பாலைவனப்பகுதியில் சோதனை செய்யப்பட்டது.

VL- SRSAM

இந்த வருடம் பிப்ரவரி மாதம் செங்குத்தாக ஏவப்படும் குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்திய கடற்படைக்காக இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
SFDR

மார்ச் மாதம் டிஆர்டிஓ Solid fuel ducted ramjet தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட்

ஜீன் மாதம் மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.தொடர்ச்சியாக 25 ராக்கெட்டுகளை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது.இது 45கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க வல்லது.
அக்னி பிரைம்

ஜீன் மாதம் அக்னி பி அடுத்த தலைமுறை பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.இந்த ஏவுகணை 1000-2000கிமீ தூரம் வரை சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது.
ஆகாஷ் NG

ஆகாஷ் ஏவுகணை மீண்டும் 23 ஜீலை 2021 அன்று சோதனை செய்யப்பட்டது.
ஆகாஷ் பிரைம்

செப்டம்பர் மாதம் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் சோதனை செய்யப்பட்டது.ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியழித்தது குறிப்பிடத்தக்கது.
VL-SRSAM

செங்குத்தாக ஏவப்படும் குறைதூர வான் பாதுகாப்பு ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
பிரலே ஏவுகணை

குறைந்த தூரம் செல்லும் பிரலே ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.1 டன் எடையுடைய வெடிபொருளை சுமந்து 500கிமீ வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது.