
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப்படைக்கு சுமார் 80 ரஃபேல் எஃப்-4 ரக போர் விமானங்கள் வாங்க இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அது தவிர எகிப்து தனது விமானப்படைக்கு 30 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கவும் ஃபிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது, மேலும் கிரீஸ் 6 ரஃபேல் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.
ஆக தற்போது டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் ஏறத்தாழ 146 ரஃபேல் போர் விமானங்களுக்கான ஆர்டர் நிலுவையில் உள்ளது அதே நேரத்தில் ஒரு வருடத்தில் 24 ரஃபேல் விமானங்களை மட்டுமே தயாரிக்க முடியும்.
ஆகவே இந்தியா மேலதிக ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்தாலும் ஏற்கனவே உள்ள ஆர்டர்கள் காரணமாக 4 வருடங்கள் கழித்து தான் தயாரிப்பே துவங்கும்.
ஆனால் நூற்றுக்கும் அதிகமான ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்தால் இந்தியாவிலேயே வேகமாக தயாரித்து தர ஃபிரான்ஸ் முன்வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ மேலதிக ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதில் இந்தியா காலதாமதம் செய்ததால் தற்போது ஒரு பெருத்த பிண்ணடைவு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.