அஷோக் லேலன்ட் மற்றும் CVRDE தயாரிப்பில் உருவான புதிய டாங்கி என்ஜின் !!

  • Tamil Defense
  • December 16, 2021
  • Comments Off on அஷோக் லேலன்ட் மற்றும் CVRDE தயாரிப்பில் உருவான புதிய டாங்கி என்ஜின் !!

அஷோக் லேலன்ட் நிறுவனமும் CVRDE – Combat Vehicles Research & Development Establishment சண்டை வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து

ஒரு புதிய அதிநவீனமான 600 குதிரை சக்தி திறன் கொண்ட டாங்கி என்ஜின் ஒன்றை வடிவமைத்துள்ளன இதனை கவச சண்டை வாகனங்களிலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட முடகத்தையும் தாண்டி இந்த என்ஜினை மிக குறைந்த காலகட்டத்தில் வடிவமைத்து தயாரித்து இருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த என்ஜின் தற்போது சென்னையில் உள்ள அஷோக் லேலன்ட் மையத்தில் பல்வேறு கட்ட தீவிர சோதனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.