
குன்னூரில் நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் ராவத் அவரது மனைவி நான்கு அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிர் இழந்தனர் இவர்களின் மறைவிற்கு நாடே அஞ்சலி செலுத்தி வரும் நிலையில்,
சீன அரசு தனது சார்பு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கையை ஏவி விட்டு அவர்களின் மரணத்தை கொச்சைபடுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு உள்ளது.
அதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை அந்த ஊடகம் தனது பத்திரிக்கையில் பிரசுரித்து உள்ளது இது சீன அரசின் மறைமுகமான கோழைத்தனமாகவே பார்க்கப்படுகிறது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்ஜ