ஜெனரல் ராவத்துடன் மரணமடைந்த சீன எக்ஸ்பர்ட் ப்ரிகேடியர் லிடர் !!

  • Tamil Defense
  • December 9, 2021
  • Comments Off on ஜெனரல் ராவத்துடன் மரணமடைந்த சீன எக்ஸ்பர்ட் ப்ரிகேடியர் லிடர் !!

நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத்துடன் ப்ரிகேடியர் லக்வீந்தர் சிங் லிடர் உயிரிழந்தார்.

ப்ரிகேடியர் லிடர் கூட்டுபடைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத்தின் துணை அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஆவார்.

இவர் சீன எக்ஸ்பர்ட் ஆவார்.CLAWS அமைப்பில் சீனாவின் விண்வெளி எதிர்ப்பு திறன்கள் பற்றி சமீபத்தில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.

மேலும் விரைவில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று தனது அடுத்த பணியை நோக்கி செல்லவிருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.