திபெத்தில் அணு வேதியியல் உயிரியியல் போர்முறை பயிற்சிகளை மேற்கொண்ட சீன ராணுவம் !!

  • Tamil Defense
  • December 17, 2021
  • Comments Off on திபெத்தில் அணு வேதியியல் உயிரியியல் போர்முறை பயிற்சிகளை மேற்கொண்ட சீன ராணுவம் !!

திபெத்தில் சமீபத்தில் சீன ராணுவம் அணு உயரியியல் வேதியியல் எதிர்ப்பு போர்முறை பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயிற்சியில் கமாண்டோ வீரர்கள், கவச வாகன சண்டை படையணிகள் மற்றும் காலாட்படை வீரர்கள் பங்கு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 24 மணி நேரம் நடைபெற்ற இந்த போர் ஒத்திகை நவம்பர் மாதம் நடைபெற்றுள்ளது ஆனால் அது பற்றிய தகவல் செவ்வாய்கிழமை அன்று தான் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இந்த பயிற்சியின் போது அணு அல்லது உயரியியல் அல்லது வேதியியல் ஆயுதங்களை கொண்டு தாக்கினால் எப்படி சமாளித்து போர் புரிவது என்ற ரீதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.