கிழக்கு லடாக்கிற்கு மிக அருகே நெடுஞ்சாலைகள் அமைத்து வரும் சீன ராணுவம் !!

  • Tamil Defense
  • December 14, 2021
  • Comments Off on கிழக்கு லடாக்கிற்கு மிக அருகே நெடுஞ்சாலைகள் அமைத்து வரும் சீன ராணுவம் !!

இந்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பேசும்போது சீனா கிழக்கு லடாக் பகுதியில் நெடுஞ்சாலைகள் சிறிய சாலைகள் மற்றும் உறைவிடங்களை அமைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதுகாப்பு வல்லுனர்கள் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் சீனா பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்து தனது பகுதிகளாக அறிவிக்கலாம் எனவும் அதற்கான முயற்சிகள் தான் இவை எனவும் சந்தேகிக்கின்றனர்.

சீனா மற்றும் இந்தியா இடையே 13 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளதும் இதுவரை ஒன்றில் கூட சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் சீனா எல்லையோரம் அவரவர் பகுதிகளில் நேருக்கு நேராக சுமார் தலா 50,000 ராணுவத்தினரை குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்தியா சுமார் 73 சாலைகளை அமைத்து வருவதாகவும் ஆனால் சீனாவின் வேகத்திற்கு ஈடாகாது எனவும் கூறினார்.

இந்த 73 சாலைகளை கட்டி முடிக்கும் பட்சத்தில் இந்தியாவின் படை நகர்வு நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவு வேகமாக நடைபெறும் எனவும் அந்த அதிகாரி கூறினார்.