அட்லாண்டிக் பெருங்கடலில் முதல் கடற்படை தளத்தை அமைக்க சீனா முயற்சி அமெரிக்காவுடன் நேரடி மோதலுக்கு தயாராகிறதா ??
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் சீனா தனது முதலாவது கடற்படை தளத்தை அமைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது அனேகமாக ஆஃப்ரிக்காவில் இது அமையலாம்.
இதன் மூலமாக சீனாவால் அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதிக்கு எதிர் பகுதியில் போர் கப்பல்களை நிலைநிறுத்த முடியும் என்பதும் இதனால் சீனா நேரடியாக அமெரிக்காவை எதிர்க்க துணிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஃப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள 28,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ஈக்வடோரியல் கினீ எனும் நாட்டில் இந்த சீன கடற்படை தளம் அமைய உள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜோர்னல பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.
குறிப்பாக ஏற்கனவே ஈக்வடோரியல் கினீ நாட்டில் பாட்டா நகரில் அமைந்துள்ள சீன வர்த்தக துறைமுகத்திற்கு அருகிலேயே இந்த தளம் அமையலாம் எனவும் கூறப்படுகிறது.
சீனாவின் விமானந்தாங்கி நாசகாரி அணு ஆயுத நீர்மூழ்கிகள் அமெரிக்காவுக்கு எதிர்புறம் நிலைநிறுத்தப்படலாம் என்பது நிச்சயமாக அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கெட்ட செய்தி தான்.
ஏற்கனவே அமெரிக்கா சீனாவை இணைத்து எந்த திட்டமும் மேற்கொள்ளக்கூடாது என ஈக்வடோரியல் கினீயை எச்சரித்துள்ளது ஆனால் இதற்கு அந்நாட்டு அரசோ அல்லது சீனாவோ எந்த எதிர்வினையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.