நாசா புறக்கணித்த ஹைப்பர்சானிக் என்ஜினை அடிப்படையாக கொண்டு சீனா தயாரித்த என்ஜின் !!

  • Tamil Defense
  • December 12, 2021
  • Comments Off on நாசா புறக்கணித்த ஹைப்பர்சானிக் என்ஜினை அடிப்படையாக கொண்டு சீனா தயாரித்த என்ஜின் !!

சீனாவின் முன்னனி விஞ்ஞானிகள் ஒரு ஹைப்பர்சானிக் என்ஜினை வடிவமைத்து தயாரித்து சோதித்தும் உள்ளனர் இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் 20 வருடங்களுக்கு முன்னர் நாசா தனது சீன அமெரிக்க பொறியாளர் மிங் ஹாங் டாங் ஆல் வடிவமைக்கப்பட்ட ஹைப்பர்சானிக் என்ஜினை போன்றே உள்ளது.

நாசா பின்னர இந்த ஹைப்பர்சானிக் என்ஜினை அதிக செலவு மற்றும் தீர்க்கப்பட முடியாத தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக வேண்டாம் என புறக்கணித்தது.

இதனை தொடர்ந்து சீனாவின் நான்ஜிங் பல்ககலைக்கழக ஏரோநாடிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாடிக்ஸ் விஞ்ஞானிகள் குழுவினர் டான் ஹூயிஜின் தலைமையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினர்.

தற்போது அந்த சீன விஞ்ஞானிகள் குழுவானது இந்த ஆய்வில் வெற்றி பெற்றுள்ளது மணிக்கு 4900-9800 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடிய திறன் உள்ளதாக சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த என்ஜின் மிக கடினமான காலநிலைகளிலும் இயங்கும் திறனை இழக்காது என்பதும் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானி டான் ஹூயிஜின் நினைத்தபடியே உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பொருத்தியுள்ள TSV-X ரக சோதனை விமானம் மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான என்ஜின்களை கொண்டுள்ளது மேலும் இந்த என்ஜின்களை வழக்கமான விமானங்களின் வேகத்தில் பறக்க வைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.