சீன ராணுவத்தில் 20 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர் மேலும் உலகின் மிகப்பெரிய ராணுவமாகவும் சீன ராணுவம் விளங்கினாலும்
உள்நாட்டிலேயே தான் பெரும்பாலும் சீன படைகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன ஆகவே சீனா உலகளாவிய ரீதியில் ராணுவ தளங்கள் அமைக்க விரும்புகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவியேற்ற பிறகு சீனாவின் இத்தகைய நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாகி உள்ளன ஆனாலும் சீனா நினைத்த அளவு வெற்றி பெறாமல் திணறி வருகிறது.
தற்போதைய நிலையில் ஜிபூட்டியில் மட்டும் தான் சீனாவின் ராணுவ தளம் அமைந்துள்ளது அங்கு வரும் அமெரிக்க ராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு சீன படையினர் குடைச்சல் கொடுப்பதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டி உள்ளது.
இது தவிர ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலும் சீனா கடற்படை தளம் ஒன்றை அமைக்கவிருந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அந்த முயற்சி முடங்கியுள்ளது.
சமீபத்தில் ஆஃப்ரிக்க நாடான ஈக்வடோரியல் கீனியில் சீனா பாட்டா நகரில் மிகப்பெரிய கடற்படை தளம் அமைக்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அமெரிக்க அரசு ஈக்வடோரியல் கீனி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு காரணம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி அமெரிக்க கடற்படையின் கொல்லை புறங்களில் ஒன்றாகும் அப்பகுதியில் சீன கடற்படை தளம் வந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு நேரடி சிக்கல் ஏற்படும் என அமெரிக்கா அஞ்சுகிறது.
இதை தவிர கம்போடியாவிலும் சீனா ரகசியமாக கடற்படை பயன்படுத்த கூடிய தளம் ஒன்றை கட்ட முயற்சி செய்த நிலையில் அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது ஆனால் இரண்டு நாடுகளும் அமெரிக்க குற்றச்சாட்டை மறுத்துள்ளன.
சாலமோன் தீவுகள், வனாட்டுவு, கிரிபாட்டி ஆகிய நாடுகளிலும் சீனா ராணுவ தளங்கள் அமைக்க தீவிரமாக முயன்று வருகிறது ஆனால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.
தஜிகிஸ்தான் நாட்டிலும் சீனாவின் ஆயுதமேந்திய காவலர் படை வீரர்கள் சிறிய அளவிலான தளம் ஒன்றில் நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.