2035ஆம் ஆண்டு வாக்கில் 6 விமானந்தாங்கி கப்பல்களை படையில் இணைத்து உலகை ஆட்டி படைக்க நினைக்கும் சீனா !!

2035ஆம் ஆண்டு வாக்கில் சீனா 6 விமானந்தாங்கி கப்பல்களை படையில் இணைக்க விரும்புகிறது அவற்றில் குறைந்தபட்சம் நான்கு அணுசக்தியால் இயங்குபவையாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது உலகில் மிக வலிமையான இடத்தில் அமெரிக்கா உள்ளது 19 விமானந்தாங்கி கப்பல்களுடன் உலகளாவிய ரீதியில் கடல்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது இதற்கு சீனா போட்டியாக உருவெடுக்க விரும்புகிறது.

தற்போது சீனா தனது மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை (டைப்-003) கட்டி வருகிறது இது சுமார் 80,000 டன்கள் எடையுடன் டீசல் என்ஜினால் இயங்கும் வகையிலும் EMALS தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டைப்-001 மற்றும் டைப்-002 ஆகிய இரண்டு விமானந்தாங்கி கப்பல்களை சீனா படையில் இணைத்துள்ளது, அவற்றில் டைப்-001 போரில் ஈடுபடும் அளவுக்கு தயாராக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி கட்டப்பட உள்ள அனைத்து சீன விமானந்தாங்கி கப்பல்களும் அணுசக்தியால் இயங்குபவை ஆகவும் ஏறத்தாழ ஒரு லட்சம் டன்கள் எடை கொண்டதாகவும் இருக்கும் எனவும் எப்போதும் நான்கு விமானந்தாங்கி படையணிகள் இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

இது தவிர சீனா போர் கப்பல்களை கட்டும் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பாக விமானந்தாங்கி கப்பல்களை கட்டும் வேகமும் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகவே சீனா உலகின் கடல்களை ஆள விரும்புகிறது என்றால் அது மிகையாகாது.