மூன்று கட்ட எல்லை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி வரும் சீனா !!

  • Tamil Defense
  • December 4, 2021
  • Comments Off on மூன்று கட்ட எல்லை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி வரும் சீனா !!

சீனா இந்தியா உடனான எல்லையோரம் மூன்று கட்ட எல்லை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ரேடார்கள், அகச்சிவப்பு கதிர்கள் அமைப்புகள் மற்றும் Pan Tilt Zoom (PTZ) Camera ஆகியவை கொண்ட மூன்று கட்ட கண்காணிப்பு அமைப்பை நிறுவி வருகிறது.

முதல் கட்டத்தில் சீன தரைப்படையின் முன்னனி நிலைகளில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு கண்காணிக்கும் திறன் கொண்ட ரேடார்கள் இருக்கும் எனவும்,

இரண்டாம் கட்டத்தில் 3 முதல் 6 கிலோமீட்டர் தெலைவு வரை இயங்க கூடிய அகச்சிவப்பு கதிர் கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும் எனவும்

மூன்றாவது கட்டத்தில் பல்வேறு கோணங்களில் 500 மீட்டர் தொலைவு வரை இயங்கி கண்காணிக்கும் திறன் கொண்ட கேமிராக்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதன் மூலமாக எல்லையோரம் தொலைதூரம் தொடங்கி மிக குறுகிய தூரம் வரை சீன படைகளால் சிறப்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.