
உலகின் எந்த பகுதிக்கும் வெறும் ஒரு மணி நேரத்தில் செல்லக்கூடிய திறன் கொண்ட ஹைப்பர்சானிக் விமானத்தை சீனா தயாரித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
148 அடி நீளம் கொண்ட இந்த ஹைப்பர்சானிக் விமானமானது 10 பயணிகளை சுமக்கும் திறன் கொண்டது என்பதும் டெல்டா வடிவிலான இறக்கைகளை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
2035 ஆம் ஆண்டு வாக்கில் குறிப்பிட்ட அளவில் இத்தகைய விமானங்களை தயாரிக்கவும் 2045 வாக்கில் 100 பயணிகள் செல்லக்கூடிய விமானங்களை தயாரிக்கவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த விமானம் மாக்-5 வேகத்தில் அதாவது ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக பயணிக்க கூடியது என கூறப்படுகிறது சரியாக சொன்னால மணிக்கு 19,312 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.