
சீனா தனது எல்லையோர உள்கட்டமைப்பு மட்டுமின்றி வான் மற்றும் நிலப்பகுதி கண்காணிப்பு அமைப்புகளையும் பல மாதங்களாக மேம்படுத்தி வருகிறது.
சமீபத்தில் வெளியான தகவல்களின்படி சீன தரைப்படை மற்றும் சீன விமானப்படை ஆகியவற்றுக்கு சொந்தமான வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.
இதன் நோக்கம் ஒர் நாடு தழுவிய மிகப்பெரிய வான் பாதுகாப்பு வலைபின்னலை உருவாக்குவதே ஆகும். மேலும் சீனா இந்திய எல்லையோரம் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவி வருகிறது.
கடந்த வாரம் வெளியான பென்டகன் அறிக்கை ஒன்றில் சீனா விண்வெளி சார்ந்த கண்காணிப்பு உளவு , செயற்கைகோள் தகவல் தொடர்பு, செயற்கைகோள் நேவிகேஷன் ஆகியவற்றில் சீன ராணுவம் அதிக முதலீடு செய்வதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.