சொந்த ஊரில் ஓய்விற்கு பின்னர் வசிக்க வீடு கட்டி வந்த ஜெனரல் பிபின் ராவத் !!

  • Tamil Defense
  • December 10, 2021
  • Comments Off on சொந்த ஊரில் ஓய்விற்கு பின்னர் வசிக்க வீடு கட்டி வந்த ஜெனரல் பிபின் ராவத் !!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி இரண்டு, உயர் அதிகாரிகள், இரண்டு விமானிகள், 7 இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் ஜெனரல் பிபின் ராவத் உத்தராகன்ட் மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பவுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற பின்னர் வசிப்பதற்கு ஒரு வீட்டை கட்டி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாய்னா கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறுகையில் ஜெனரல் பிபின் ராவத் சொந்த ஊரை நேசித்தார். ஓய்வுக்கு பிறகு இங்கே வாழ விரும்பினார். விரைவில் வருவதாக கடந்த முறை வந்த போது உறுதி அளித்ததாகவும்

சில நாட்கள் முன்னர் சாலைகள் மோசமாக இருப்பது பற்றி பேசிய போது தனது அதிகாரத்தின் மூலமாக சாலை பணிகளை நடைபெற செய்ததாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் விரும்பியதாகவும் கூறினர்.

அந்த பகுதியில் உள்ள மருத்துவம் கல்வி வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகள் குறித்தும் மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டிருந்ததாகவும் துவாரிகால் ஒன்றியத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி ஒன்றை கொண்டு வர உறுதி அளித்தாகவும் மக்கள் கூறினர்.

ஆனால் தனது ஒய்வு காலம் மற்றும் தனது வாக்குறுதிகளை நனவாக்கி காண்பதற்கு முன்னரே இவ்வுலகை விட்டு அவர் பிரிந்து சென்றுள்ளார். ஒரு திறமையான ராணுவ வீரராகவும் ஒரு நல்ல குடிமகனாகவும் ஜெனரல் ராவத் வாழந்துள்ளார் என்பதில் ஐயமில்லை.