போதை பொருள் கடத்தலை தடுக்க BSF துப்பாக்கி சூடு; 1 வங்கதேச நபர் உயிரிழப்பு !!

  • Tamil Defense
  • December 23, 2021
  • Comments Off on போதை பொருள் கடத்தலை தடுக்க BSF துப்பாக்கி சூடு; 1 வங்கதேச நபர் உயிரிழப்பு !!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட வங்கதேச குழுவினர் மீது எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 24 வயதான வங்கதேச நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார், இந்த சம்பவம் அதிகாலை 1:40 மணியளவில் மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தில் உள்ள நவாடா காவல்நிலைக்கு அருகே இந்திய எல்லை பகுதிக்குள் நடைபெற்றுள்ளது.

இந்திய எல்லை பகுதியில் சுமார் 200 தொலைவுக்குள்ளாக நடைபெற்ற காரணத்தால் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வங்கதேச எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் இந்த பிரச்சனை பற்றி தகவல் அளித்து பேச்சுவார்த்தை நடத்தி கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

15-20 பேர் கொண்ட குழுவில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளை சேர்ந்தவர்கள் ஃபென்சடில் இருமல் மருந்தை (போதை பொருளாகவும் உபயோகிக்க முடியும்) கடத்த முயற்சி செய்துள்ளனர் இது வங்கதேச நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

அப்போது அவர்களை நெருங்கிய எல்லை பாதுகாப்பு படையினர் சரணடைய கூறிய நிலையில் வெட்டுகத்திகள் கொண்டு வீரர்களை தாக்க முயன்றுள்ளனர் இதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில் வங்கதேச நாட்டின் சாய்நவாப்கன்ஜ் மாவட்டத்தை சேர்ந்த இப்ராஹீம் என்பவன் கொல்லப்பட்டான் தொடர்ந்து வெட்டு கத்திகள் போதை மருந்து மொபைல் போன் ஆகியவை கைபற்றப்பட்டுள்ளன.